Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் வாக்களிக்கும் வகையில் சட்ட திருத்தம் – அமைச்சரவை அனுமதி!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் வாக்களிக்கும் வகையில் சட்ட திருத்தம் – அமைச்சரவை அனுமதி!

Share
Share

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் வாக்களிப்பதற்கு இடமளிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு:-

“இலங்கை அரசமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரிமையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின்போது நடைமுறைப்படுத்தப்படும்.

வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்துக்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு.

சமகால தேர்தல் சட்டங்களின்கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.

எனினும், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்ட ரீதியான மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகத் தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்குத்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...