மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலை
ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியது.
தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்றுமுன்தினம்
ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Leave a comment