வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுண்டிக்குழிப் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு தொகுதி நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த 42 வயதான இந்தச் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து வந்தபோது யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருடப்பட்ட நகைகள் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
Leave a comment