யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment