தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நடிகர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் சிறார்கள் 08 பேர், பெண்கள் 20 பேர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் 45க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கியும் கூட்டம் நிறைவடைந்து மக்கள் கலைந்து சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், நோயாளர் காவு வண்டிகளைத் தயார் நிலையில் வைக்கவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.
Leave a comment