Home தாயகச் செய்திகள் விசுவமடுவில் ஆலய வளாகத்திலிருந்து சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

விசுவமடுவில் ஆலய வளாகத்திலிருந்து சடலம் மீட்பு!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு
மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குரவில் உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற் கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா
என்பது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...