கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் 1,778 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், 3,428 பாரியளவான வாகன விபத்துக்களும், 6,241 சிறியளவான வாகன விபத்துக்களும் குறித்த காலப்பகுதியினுள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Leave a comment