Home தாயகச் செய்திகள் வவுனியா ஏ – 9 வீதியில் மோ. சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியா ஏ – 9 வீதியில் மோ. சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!

Share
Share

வவுனியா, பரசங்குளம் ஏ – 9 வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியாள்ளர்.

சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

படுகொலையான இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் மக்கள் போராட்டம்!

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆனந்தராசன் சஜீவனுக்கு நீதி கோரி நேற்று மல்லாவியில் போராட்டம்...

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!

“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால்...

நல்லூர் கந்தன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

நாமலுக்குப் பிணை!

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை...