Home தாயகச் செய்திகள் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்:வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் சிக்கினர்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்:வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் சிக்கினர்!

Share
Share

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிர்வு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 86 கைக்குண்டுகள், ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மேலும் 03 எலும்புத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு!

நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல்...

வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு...

மாகாண சபைத் தேர்தல்அடுத்த வருட ஆரம்பத்தில்!

மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...