Home தென்னிலங்கைச் செய்திகள் வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!

Share
Share

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதனடிப்படையில்,

இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

இது, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் இணையவழி மூலம் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உதவுகிறது. 

இந்த நடவடிக்கை நீதிமன்ற அமைப்பில் பணம் செலுத்துவதை தானியங்கி மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டத்தைக் குறிக்கிறது. 

இந்த வசதியை நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...