யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பிரதம குரு கணபதீஸ்வரக் குரு தலைமையிலான குருமார் திருவிழா பூஜைகளை நடத்துகின்றனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 4ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 6ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 7ஆம் திகதி பட்டுத் தீர்த்தத் திருவிழாவும், 8ஆம் திகதி ஆஞ்சநேயர் மடையும் இடம்பெறவுள்ளது.
திருவிழாவுக்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளன.
நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான குழுவும், ஏனைய பணிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளன.
மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.













Leave a comment