Home தென்னிலங்கைச் செய்திகள் வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!

Share
Share

இறுதிப் போரில் படையினரால் அபகரிக்கப்பட்ட பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.

முந்தைய விசாரணையின்போது, இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10 ஆயிரம் தங்கப் பொருட்களை பரிசோதித்து அதில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டபோது சமர்ப்பணங்களை முன்வைத்து குறித்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...