முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
இது சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டிப்பதல்ல என்றும், மாறாக சட்டத்துக்கு முரணாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எதிராகச் செயற்படுவதைக் கண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் சில மணி நேரம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Leave a comment