Home தாயகச் செய்திகள் வடக்கு – கிழக்கில் இணையம் ஊடாக மோசடி அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு – கிழக்கில் இணையம் ஊடாக மோசடி அதிகரிப்பு!

Share
Share

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக
பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக ரெலிகிராம், வட்ஸ் அப் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களில், மோசடியாளர்கள் பொது மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் கியூ.ஆர். குறியீடுகள் போன்ற
இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் நிகழ்நிலை வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக
அறியமுடிகின்றது.

அண்மைக் காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி, பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில், இணையத்தளத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...