வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், 37 இலட்சத்து 21 ஆயிரத்து 430 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து, 80 ஆயிரத்து 614 அபாயகரமான வெடி பொருட்களை
அகற்றியுள்ளதாக, ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று அனுப்பி வைத்த அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில், ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதி உதவி
யுடன் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனம், 2016 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில், தாம் மேற்கொண்ட பணிகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக பிரிவின் கீழ் உள்ள
தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு, மாங்குளம், கொக்காவில் ஆகிய பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள, முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும், கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.
அந்தவகையில், 37 இலட்சத்து 21 ஆயிரத்து 430 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து, 80ஆயிரத்து 614 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
ஸார்ப் நிறுவனம், புதுக்குடியிருப்பு, அம்பகாமம், மாங்குளம், கொக்காவில், தட்டுவன்
கொட்டி மற்றும் ஆனையிறவிலும், தற்போது துரித கதியில் பணிகளை முன்னெடுத்து வருகின்றது என ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் பிரபாத் நாரம்பனவ
குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment