Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜிதவின் முன் பிணை மனு: 30 ஆம் திகதி விசாரணைக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ராஜிதவின் முன் பிணை மனு: 30 ஆம் திகதி விசாரணைக்கு!

Share
Share

முன் பிணையில் விடுவிக்க மறுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சீராய்வு செய்து தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

முன் பிணையை நிராகரித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றத் தீர்ப்பின் நகல் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த மனு தொடர்பாக உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, குறித்த முன் பிணை மறுப்பு தீர்ப்பின் நகலைச் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...