Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை!

Share
Share

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனக் குறிப்பிட்ட பிமல், அதனை நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...