Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

Share
Share

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக சட்டம் பிரயோகிக்கப்படுகிறது.

முறையான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் தகுதி, தராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு அரசாங்கத்துக்கு எந்தவித இராஜதந்திர அழுத்தமும் கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கருத்துதெரிவித்த இருவரும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல, அதில் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை உடையவராவார்.

எனவே, இலங்கைக்கான உயர்ஸ்தானிகரோ, தூதுவரோ இதுவரையில் அவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

இதனூடாக, இலங்கையில் சட்டம் அனைவருக்கும் சமமான வகையில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துள்ளது என்பதனை உணர முடிகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணத்தையும், தற்போதைய ஜனாதிபதியின் உள்நாட்டு பயணங்களையும் ஒப்பிட முடியாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கைக்குள் மரண வீடுகளுக்குச் செல்வது அல்லது நாட்டில் ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்வதையும் தனியான விமானத்தை ஒதுக்கி பயணம் செய்வதையும் ஒப்பிட முடியாது எனவும் அவ்வாறு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரச ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக அரச வாகனங்களை பயன்படுத்துவதற்கான வரையறைகளை தொடர்பில் சுற்றறிக்கைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையானது, பொதுச் சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமையுடன் தொடர்பான பிரச்சினையாகும். அது தொடர்பில் கிடைத்த முறைப்பாடு உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் நோய் நிலைமை உள்ளிட்ட காரணங்களை கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், எவருக்கேனும் இந்த விசாரணை மற்றும் கைதுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் இருக்குமாயின், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.

எனினும், கடந்த காலங்களில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

ஆனால், தற்போது சட்டம் அனைவருக்கும் சமமான அமுல்படுத்தப்பட்டு, பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படுகிறது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை...