Home தாயகச் செய்திகள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரத் தடையில்லை என்கிறது அரசாங்கம்
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரத் தடையில்லை என்கிறது அரசாங்கம்

Share
Share

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூரும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.

எனவே இறந்த உறவினர்களை சுதந்திரமாக நினைவு கூர முடியும்
இதற்கு பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...