Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் நியமனம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் நியமனம்!

Share
Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல்
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தச் சட்டங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு உண்டான நிறைவேற்றுத் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்நாள் பேராசிரியர் இ.குமாரவடிவேல் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ்.குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூத்த கல்வியியலாளராவார்.

பௌதிகவியல் துறையில் பேராசிரியராக விளங்கிய இவர், விஞ்ஞான பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர்.

இவரது தகைசார் பங்களிப்பின் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தவர்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் படி, வைபவ ரீதியாகப் பதவிவழி வேந்தரே பட்டமளிப்பு விழாவின்போது, நிகழ்வைத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பட்டத் தராதரச் சான்றிதழ்களையும் வழங்குவது மரபாகும்.

எனினும், முன்னாள் வேந்தரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த
போதிலும், புதிய வேந்தரை ஜனாதிபதி நியமிக்காத நிலையில் கடந்த மார்ச் மாதம் 19 முதல் 22 வரை நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு வைபவம் வேந்தர் இல்லாமலேயே நடந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றுக்கு சீல்!

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை...

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு! (படங்கள்)

மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடி இன்று செவ்வாய்க்கிழமை...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று...

மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை...