வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 36 கோடியே 14 இலட் சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார்.
நெடுந்தீவு உதவி பிரதேச செயலர் பிரிவில் 1,216 வீடுகளும் வேலணையில் 544, ஊர்காவற்றுறையில் 668, காரைநகரில் 268, யாழ்ப்பாணத்தில் 1,129, நல்லூரில் 791, கோப்பாயில் 466, சங்கானையில் 2,851, சண்டிலிப்பாயில் 2,107, உடுவிலில் 920, தெல்லிப் பழையில் 850, சாவகச்சேரி 1,652, கரவெட்டியில் 30, பருத்தித்துறையில் 754, மருதங்கேணியில் 213 வீடுகள் என யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரத்து 459 வீடுகளை
சுத்தம் செய்வதற்காக 36 கோடியே 14 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment