யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சிறிய ரக வாகனம் ஒன்றில் பயணித்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்புக்கு இடையிலான முன்பகையே இந்த வாள்வெட்டு சம்பவத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
Leave a comment