யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து காவல்துறையினரால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்துவந்த நிலையில், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment