யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ.கேதீஸ் வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்-
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை.
யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் 15ஆம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் 16ஆம், 17ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு
விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன- என்றுள்ளது.
Leave a comment