Home தாயகச் செய்திகள் யாழில் காணி ஒன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் காணி ஒன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூட குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (02) துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது காணிக்குள் இருந்த மலசல கூடத்தின் குழியின் மேல் மூடி உடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, குழிக்குள் பார்த்தவேளை அதனுள் பெருமளவான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி ரவைகளை பார்வையிட்டுச் சென்றனர்.

துப்பாக்கி ரவைகளை மீட்க மல்லாகம் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யவுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...