Home தாயகச் செய்திகள் யானை தாக்கி மகிழவெட்டுவானில் இளம் தாய் மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யானை தாக்கி மகிழவெட்டுவானில் இளம் தாய் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 வயது குழந்தை அதிஸ்ட வசமாக உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தை அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...