வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு நேற்றுக் காலை 07.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது இன்று காலை 07.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த திணைக்களம்
பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Leave a comment