திருகோணமலை – அனுராதபுரம் சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் (வயது 71) உயிரிழந்துள்ளார்.
மூதூர், சம்பூரில் இருந்து திருகோணமலை நகரில் மரணச்சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்த நாகேஸ்வரன், பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண் ஒருவர், அவர் மீது மோதியுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment