எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
70 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
முன்னதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச் சீட்டுக்கான அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.
Leave a comment