கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை வெடிக்காத நிலையில் 31 எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டைச் சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டியுள்ளார். அதன்போது கிடங்கினுள் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்தார்.
அறிவித்தலில் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அந்தக் குண்டுகளை மீட்பதற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.
Leave a comment