Home தென்னிலங்கைச் செய்திகள் மின் கட்டணம் அதிகரிக்கிறது?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கிறது?

Share
Share

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இந்த கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும். இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சார சபை ரூ. 1,769 மில்லியன் இழப்பீட்டை பதிவு செய்துள்ளது. 

இந்த இழப்பை சரி செய்ய 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வு முன்மொழியப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...