Home தாயகச் செய்திகள் மின்சார சபை ஊழியர்களுக்கு சலுகை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சார சபை ஊழியர்களுக்கு சலுகை!

Share
Share

இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தச் செயல்முறைக்கு இன்று(27) முதல் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள் அரசின் உரிமையின் கீழ் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய நிறுவனங்களில் உள்வாங்க விரும்பாத ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓய்வு வழங்கப்படும். 

இதற்கிடையில், புதிய நிறுவனங்களில் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளுக்கு, தற்போது இலங்கை மின்சார சபையில் உயர் பதவிகளில் பணியாற்றும் பொறியியலாளர்களை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை...

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம் – முன்னாள் எம்.பி. ஹிருணிகா எச்சரிக்கை!

“இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று...