Home தாயகச் செய்திகள் மாவை சேனாதிராஜாவின் 6 ஆம் மாத நினைவஞ்சலி! (படங்கள்)
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் 6 ஆம் மாத நினைவஞ்சலி! (படங்கள்)

Share
Share

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் குடும்பத்தினருக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவை சோ.சேனாதிராஜாவின் புதல்வன் மா.கலையமுதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா. குகதாஸ், திரு.கஜதீபன், யாழ். மாநகர சபையின் உறுப்பினர் ப.தர்ஷானந், தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஐ.நாகரஞ்சினி, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர், போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...