சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு 90 நாள் இலவச சுற்றுலா விஸாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மாலைதீவு விஜயத்துக்கு இணையாக இந்த
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களை வழங்குவது நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன்
விஸாக்களை பெறுவதற்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலை
தீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடு செய்யப்போதுமான பணம் தங்களிடம் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விஸா வசதி வழங்கல் ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடிவரவுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக்கொண்டு, இந்த விஸா வசதி வழங்கப்படுவதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Leave a comment