ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க ஜூலை இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் 6ஆவது வெளிநாட்டு பயணமாக இது அமையவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் நிகழ்விலும் ஜூலை 26 ஆம் திகதி மாலைதீவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டும் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த பயணத்தை ஜனாதிபதி பணிமனை இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment