முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி
கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
70 வயதான மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்றுமுன்தினம் மாலை மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நேற்று காலை கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலி
ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment