Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

Share
Share

மாகாண சபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர்த் தியாகங்களுக்கு மத்தியிலேயே இந்த முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.

மாகாண சபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மாகாண சபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அந்த முறைமையில் ஜனாதிபதியின் எதேச்சதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லாவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...