தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, அம்பாந்தோட்டை, தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப்புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் குடிபெயர்ந்தார் என்ற செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.
அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.” – என்றுள்ளது.
மொட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்த விமல் அணியினர், மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அவசரமாகச் சந்தித்துப் பேசியுள்ளமை தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Leave a comment