முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகிய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இலஞ்ச,
ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a comment