கொழும்பு, விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் குழு கலந்து கொண்ட சமீபத்திய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஜூன் 16 ஆம் திகதியன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், தேவையான சட்டத்தைத் தயாரிப்பதற்கான பணிகள் சட்ட வரைஞருக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டவுடன், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவும் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment