நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளை அனுமதிக்க முடியாததால் சில நிறுவனங்கள் விநியோகத்தில் ஈடுபடவில்லை என்றும், தெற்காசிய சந்தை நிலையை அடிப்படையாகக் கொண்டு விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுமார் 80% – 85% கொள்முதல் பணி ஏற்கனவே நிறைவு பெற்றிருப்பதாகவும், நவம்பர் மாதத்திற்குப் பின்னர் மருந்து விநியோகம் சீராகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment