யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்தார்.
இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசு 298 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.






Leave a comment