Home தாயகச் செய்திகள் மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

Share
Share

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டனர்.

முதியவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி மிக மோசமான முறையில் அவர்களை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தினர்.

அதேவேளை, இந்தச் சம்பவத்தைச் செய்தியாக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி துரத்தியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாகத் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாகக் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மயிலிட்டிப் பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்த முயன்றனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிஸார், முதியவர்கள் – பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி, அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அவர்களைத் தமது பலத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசி அப்புறப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தைச் செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்.

மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்க வந்த வேளை, எமது காணிகளை விடுவியுங்கள் என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடத்த முற்பட்ட போது கடந்த கால அரசு போன்றே, பொலிஸார் எம் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதே பொலிஸார் எம்முடன் நடந்து கொண்ட விடயம் சான்று பகிர்கின்றது எனக் காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...