மன்னார் பேசாலை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் உடலம் மீதான பிரேத பரிசோதனை மன்னார் பொது மருத்துவமனையில் நாளை நடைபெறவுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஜஸ் போதைப் பொருள் தொடர்பில் குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் பேசாளை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Leave a comment