இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
கடந்த 29 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழகம் – இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரினுடைய வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிவான், இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 29 ஆம் திகதி இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மேற்படி 8 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்,
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23 படகுகளுடன் 174 தமிழக மீனவர்கள் கைதாகியுள்ளனர்
Leave a comment