சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை – அதற்கு உதவியமைக்காக சகோதரர்கள் இருவருக்கு 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்.
குற்றத்தின் பாரதூரதன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே இந்தத்
தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன், குற்றவாளிகள் சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாயை நட்டஈடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியை வன்புணர்ந்த சகோதரருக்கும் இதற்காக அவருக்கு உதவிய சகோதரருக்குமே 7 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், சிவஸ்கந்தசிறீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.
Leave a comment