Home தென்னிலங்கைச் செய்திகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

Share
Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு (இலங்கை நேரம் மதியம் 1.30 மணி)
ஆரம்பமாகிறது.

இன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உரையாற்றுவார்.

இதன்போது, இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும். பின்னர், இலங்கை நேரம் பிற்பகல் 3.45 மணிக்கு இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து விவாதம் நடைபெறும்.

இதில்,

உறுப்பு நாடுகளின் பிரதி நிதிகள் தமது நாடுகளின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துகளை முன்வைப்பர்.

பிரதிநிதிகளின் கருத்துகளின் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு – முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளிப்பார்.

இதேநேரம், இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடரில் பிரிட்டன் தலைமையிலான உறுப்பு நாடுகளால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் நடைபெறும் என்று அறிய வருகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...