Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழியை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடுகிறது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழியை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடுகிறது!

Share
Share

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மறுதினம் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவினர் அரியாலை மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற் கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமற்போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!

யாழ். செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார். மீசாலை...

சித்துபாத்தி மனிதப் புதைகுழி; சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!

அரியாலை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண...

சித்துப்பாத்தி புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

செம்மணி புதைகுழி விவகாரத்தை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சி – சரத் வீரசேகர கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும்...