மது பாவனையால் தினமும் சுமார் இலங்கையர்கள் 50 பேர் மரணமடைகின்றனர் – என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் மதுசாரத்துக்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மதுபாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைக்கவும் மது பாவனையால் ஏற்படுகின்ற சுகாதார, பொருளாதார பிரச்னைகளைக் குறைக்கவும் விரைவான அரச திட்டம் அவசியம்.
நாட்டில், நிகழும் மரணங்களில் 83 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது பாவனையால் தினமும் சுமார் 50 பேர் மரணமடைகின்றனர்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணமடைகிறார்கள்.
இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு மதுசார பாவனையும் முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Leave a comment