மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் பொதுமகன் ஒருவர் இன்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொதுமகன் கடந்த 2 நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காணாமல் போன பொதுமகன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment